வேல் மாறல்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய ‘வேல் மாறல்’

  ... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … )

( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
        முளைத்த(து)என முகட்டின்இடை
        பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
        ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
        ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
        வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
        அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
        ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
        நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
        குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
        அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
        தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
        இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
        பெருத்தகுடர் சிவத்ததொடை
        எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
        தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
        இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
        பெருத்தகுடர் சிவத்ததொடை
        எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
        ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
        நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
        குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
        அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
        ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
        ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
        வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
        அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
        கவிப்புலவன் இசைக்(கு)உருகி
        வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
        முளைத்த(து)என முகட்டின்இடை
        பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
        நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
        எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
        வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
        கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
        களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
        குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
        கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
        அடுத்தபகை அறுத்(து)எறிய
        உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
        தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
        தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
        அடுத்தபகை அறுத்(து)எறிய
        உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
        வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
        நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
        எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
        குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
        கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
        கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
        களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
        வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
        அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
        ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
        ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
        முளைத்த(து)என முகட்டின்இடை
        பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
        கவிப்புலவன் இசைக்(கு)உருகி
        வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
        பெருத்தகுடர் சிவத்ததொடை
        எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
        தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
        இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
        குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
        அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
        ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
        நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
        குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
        அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
        ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
        நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
        பெருத்தகுடர் சிவத்ததொடை
        எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
        தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
        இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
        முளைத்த(து)என முகட்டின்இடை
        பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
        கவிப்புலவன் இசைக்(கு)உருகி
        வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
        வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
        அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
        ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
        ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
        குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
        கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
        கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
        களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
        வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
        நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
        எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
        தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
        அடுத்தபகை அறுத்(து)எறிய
        உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

( … முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் … )

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.

… … … வேலும் மயிலும் துணை … … …

Comments

Popular posts from this blog

🌿 10 Digital Detox Habits for a Healthier and Happier Mind

10 Smart Ways to Save Money While Living Sustainably

10 Digital Detox Habits for a Healthier, Happier Mind